விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக அவதரித்தார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றதால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment